அஜித்தின் விவேகம் பற்றிய சில தகவல்கள்!

அஜித்தின் விவேகம் பற்றிய சில தகவல்கள்!

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் இந்த படத்தில் எத்தனை பாடல்கள் போன்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'வேதாளம்' படத்திற்கு பின்னர் மீண்டும் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்திற்கு இசையமைத்துள்ள இளம் இசைப்புயல் அனிருத் இந்த படத்திற்காக ஐந்து பாடல்களையும் இண்டர்நேஷனல் தீம் ஒன்றையும் கம்போஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை வரும் ஜூலை மாதம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வியாழக்கிழமை வெளிவரவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி கிடைத்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

அஜித், காஜல் அகர்வால், அக் ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top