சமந்தாவின் யசோதா திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

சமந்தாவின் யசோதா திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'யசோதா' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இரட்டை இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'யசோதா'. தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைத்திருக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி 'யசோதா' திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா ஓஓ சொல்றியா..' என்ற பாடலுக்கு பிறகு ரசிகர்களிடத்தில் 'கவர்ச்சி நடிகை' என்ற பட்டத்தையும் வென்றிருக்கும் நடிகை சமந்தா, கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் என்பதால் 'யசோதா' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top