பிக்பாஸ் வெறும் ஸ்கிரிப்டாம் - ஆரவ் அண்ணன்!

பிக்பாஸ் வெறும் ஸ்கிரிப்டாம் - ஆரவ் அண்ணன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட்டாக மட்டுமே பார்ப்பதாக ஆரவின் சகோதரர் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று விபரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நெட்டிசன்களும் இதையே தான் தெரிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் கண்டும் காணாதது போன்று உள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆரவின் சகோதரர் நதீம் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, நிகழ்ச்சியில் நடப்பதை ஸ்கிரிப்ட்டாக பார்ப்பதாக கூறியுள்ளார். பிக் பாஸ் சமூக வலைதளங்களில் நடப்பவற்றை உற்று கவனித்து வருகிறார். அதற்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டை மாற்றிக் கொடுத்து போட்டியாளர்களை நடிக்க வைக்கிறார்.

ஸ்கிரிப்ட் படி ஓவியாவை முதலில் நல்லவர் போன்று காட்டிவிட்டு பின்னர் அவரையே கெட்டவராக காட்டினார் பிக் பாஸ். ஜூலி விஷயத்திலும் இதையே தான் செய்தார்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவும் தானாக நடப்பது கிடையாது. ஸ்கிரிப்ட்டில் உள்ளபடியே போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top