வொண்டர் வுமன் என்றால் கேல் கடோட் தான்!

வொண்டர் வுமன் என்றால் கேல் கடோட் தான்!

பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் தொடங்கி, எல்லாமே சூப்பர் ஹீரோ படங்கள் தான். சூப்பர் ஹீரோ என்றவுடன் நினைவிற்கு வருவதும், பெரும்பாலும் ஹீரோக்களான ஆண்கள்தான். ஆனால் பெண்ணை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது வொண்டர்வுமன் (Wonder Woman).

அதுவும் ஹாலிவுட்டில் பெரிதாக அறியப்படாத பெண் ஒருவர், இப்படத்தை இயக்கி இருக்கிறார். முதல் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. மனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசான்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா. அங்கு இருக்கும் ஆயுதங்களால் தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஒருகட்டத்தில் ஜெர்மன் படையிடமிருந்து தப்பிவரும் ஸ்டீவை அவள் காப்பாற்றுகிறாள்.

ஜெர்மன் படையிடமிருந்து கைப்பற்றி வந்த புத்தகத்தை, லண்டனில் இருக்கும் தனது சீனியர்களிடம் ஸ்டீவ் தர வேண்டும். எனவே ஜெர்மனியின் தலைவர்தான் ஆரீஸ் என நினைக்கும் டயானா, ஸ்டீவுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்புகிறாள். பின்பு அவள் சந்திக்கும் பிரச்சனைகள், யார் ஆரீஸ், டயானா இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை அதிரடியுடன் எமோஷனலாய் சொல்கிறது வொண்டர் வுமன்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top