சுந்தர்.சி படத்தில் ஹன்சிகா இல்லை! ஸ்ருதியாம்!

சுந்தர்.சி படத்தில் ஹன்சிகா இல்லை! ஸ்ருதியாம்!

சூர்யா, விஷால், தனுஷுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தந்தை கமலுடன் முதன்முறையாக சபாஷ் நாயுடு படத்தில் இணைந்து நடிக்கிறார். அவரது மகளாகவே இப்படத்தில் அவர் வேடமேற்றிருக்கிறார். இந்நிலையில் சுந்தர்.சி. இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் சங்கமித்ரா படத்துக்காக கதாநாயகி தேடி வருகின்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட நாயகிகள் இதில் நடிக்க உள்ளனர். வழக்கமாக சுந்தர்.சி தனது சமீபத்திய படங்களில் ஹன்சிகா மோத்வானியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து வருகிறார். இப்படத்துக்கும் அவர்தான் முதல் சாய்ஸாக இருப்பார் என்று பேசப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பேச்சில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சங்கமித்ரா டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் பேசப்பட்டு வருகிறார். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. தவிர மேலும் 2 ஹீரோயின் இதில் நடிக்க உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்படம் தயாராவதால் அந்தந்த மொழியை சேர்ந்த நடிகைகள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top