இருமுகனை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம்?

இருமுகனை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம்?

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'இருமுகன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் கடந்த நான்கு நாட்களாக உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது.
 
இந்நிலையில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் விக்ரம் அடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹரி இன்னும் 'சிங்கம் 3' படத்தை முடிக்காததால் இந்த இடைவெளியில் ஒரு குறுகிய கால படத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த படத்தை சசிகுமார் நடித்த 'பிரம்மன்' படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உருவாகவுள்ள இந்த படத்தை அடுத்து விக்ரம் 'சாமி 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top