ரஜினியின் பேட்ட வெளியீடு – பின்வாங்காத தல அஜித்தின் விஸ்வாசம்!

ரஜினியின் பேட்ட வெளியீடு – பின்வாங்காத தல அஜித்தின் விஸ்வாசம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் போஸ்டரில் பொங்கலுக்கு வரவிருப்பதாக அறிவித்தது. இதனால் ஏற்கனவே பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்திருந்த விஸ்வாசம் படத்துக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘வாட்ச்மேன்’, ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘எல்.கே.ஜி.’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்தப்படங்கள் பொங்கல் பந்தயத்திலிருந்து பின்வாங்குவதைத்தவிர வேறுவழியில்லை. இந்நிலையில் பேட்ட வருவதால் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வருவதில் ஏதும் மாற்றம் உண்டா என்ற கேள்வி எழுந்தது.
 
இவ்வாறிருக்க விஸ்வாசம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள படக்குழுவினர் போஸ்டரில் அறிவித்தாலும், எங்களுக்கு முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Tags: Hero, Madurai News, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top