ஹிப் ஹாப் ஆதி தமிழாவின் 'அன்பறிவு'

ஹிப் ஹாப் ஆதி தமிழாவின் \'அன்பறிவு\'

இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி தமிழா நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்பறிவு' என பெயரிடப்பட்டிருக்கிறது.
 
'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', ' நான் சிரித்தால்' ஆகிய படங்களை தொடர்ந்து இசையமைப்பாளரும், இயக்குனரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி தமிழா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் 'அன்பறிவு'. இப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி தமிழாவுடன் மூத்த நடிகர் நெப்போலியன், சாய்குமார், விதார்த், தீனா , நடிகைகள் காஷ்மீரா, சங்கீதா கிரிஷ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
 
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தயாரிக்கும் ' அன்பறிவு ' படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top