துல்கர் சல்மானை காதலிக்கிறாரா தன்ஷிகா?

துல்கர் சல்மானை காதலிக்கிறாரா தன்ஷிகா?

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'சோலோ'. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். பல கதைகளைக் கொண்ட இந்தப் படத்தில், துல்கர் சல்மானைக் காதலிக்கும் பெண்ணாக சாய் தன்ஷிகா நடித்துள்ளார்.

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சாய் தன்ஷிகாவுக்கு, அவர்களைப் போல பேசுவது, நடப்பது எல்லாம் கடினமாக இருந்ததாம். அதுவும் குறிப்பாக, அவர்களுடைய உடல்மொழியைக் கொண்டு வருவதற்குள் படாதபாடு பட்டுவிட்டாராம். சாய் தன்ஷிகாவுக்கு மலையாளம் புதிது என்பதால், படப்பிடிப்பு சமயத்தில் ரொம்பவே உதவியாக இருந்தாராம் துல்கர் சல்மான்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top