மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் திடீர் மரணம்

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் திடீர் மரணம்

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் Zain Nadella திங்கள்கிழமை காலமானார், அவருக்கு வயது 26.

பெருமூளை வாதம் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த Zain Nadellaவால் நிற்கவோ, நடக்கவோ முடியாது.
 
இதற்கான சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், உடல் நலம் மோசமடைந்து திங்கட்கிழமை காலமானார்.
 
இத்தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.
 
மேலும் அதில், இறந்தவரது குடும்பத்திற்கு மன தைரியம் வழங்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யவும், அதேவேளை பாதிக்கப்பட்டவர் தனிமையில் துக்கத்தை அனுபவிக்கும் வகையில், அவரது தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த 2014ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் CEOஆக பொறுப்பேற்றுக்கொண்டது முதல், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top