டிரைவர்களை பிசியாக்கும் டிரைவர் ஆப்!

டிரைவர்களை பிசியாக்கும் டிரைவர் ஆப்!

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கால் டாக்கி நிறுவன அமைப்புகள் உருவாக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கியதன் காரணமாக, இந்தியாவிலும் சாத்தியமானதாக கருதப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியாவின் பல நகரங்களில் கால் டாக்சி அமைப்புகள் நல்ல முறையில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.

அனைவருக்கும் கார் பயணம் பொதுவானது என்ற கோட்பாட்டுடன் கால் டாக்சிகள் இயங்கி கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிற்கு ஈடாக நம் இந்தியாவிலும் சொந்த கார் வைத்திருப்பவர்கள் பெருகிவிட்ட காரணத்தினால் நல்ல டிரைவர்களின் தேவைகளும் அதிகமாகிவிட்டன. இந்த தேவையை பூர்த்தி செய்ய வந்துள்ளதே டிரைவர் ஆப் என்னும் அப்ளிகேஷன். தற்போது சென்னையில் பிரபலமாகி வரும் இந்த டிரைவர் ஆப் மூலமாக டிரைவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது ரூபாய் 20,000 முதல் 50,000 வரை வருமானம் கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன.

பொதுவாக நம்முடைய சொந்த காரை கால் டாக்சியாக மாற்ற வேண்டுமென்றால் அந்த காரை முறையாக ஒரு கால் டாக்சி நிறுவனத்துடன் இணைத்தாக வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டிய மூலதனங்கள் ஒரு கார், அதற்கான தகுதியுடைய டிரைவர், டிரைவருக்கான சம்பளம், காரை கால் டாக்சி நிறுவனத்தோடு இணைப்பதற்கான இணைப்புச் செலவுகள், கால் டாக்சி நிறுவனத்திற்கு செலுத்துகின்ற டெபாசிட் தொகை ஆகியவையாகும். இவை அத்தனையையும் செய்தாலும் கூட, நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு சில சமயங்களில் கால்டாக்சி மூலமாக லாபம் நம்மை வந்து அடையாது. அதற்கு காரணம் உயர்ந்துகொண்டே செல்லும் டிரைவர் சம்பளங்கள், உதிரி பாகங்களின் விலைகள், காரின் பாரமரிப்புச் செலவுகள் ஆகியவையாகும்.

கால் டாக்சி நிறுவனத்தையே அணுகாமல், திறமையும் அனுபவமும் உள்ள டிரைவர்கள் மிக எளிதாக ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானத்தை ஈட்டிக்கொள்ள வந்துவிட்டது டிரைவர் ஆப் அப்ளிகேஷனான ‘ask me drivers”. தற்போது சென்னையில் மிகவும் பிரபலமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது ‘ask me drivers” application. டிரைவர் தேர்விற்கான நிபந்தனைகளாக இருப்பவை டிரைவரின் இருப்பிடச்சான்றிதழ், டிரைவரின் விலாச சான்றிதழ், வங்கி கணக்கு பற்றியதான விபரங்கள், அசல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளியிலிருந்து பெறுகின்ற நற்சான்றிதழ் ஆகியவையேயாகும்.

இவற்றையெல்லாம் சமர்ப்பித்து திருப்தி செய்து கொள்ளும்பட்சத்தில் டிரைவர் வேலைக்காக அங்குமிங்கும் அலையாமல் ஒரு டிரைவர் வீட்டிலிருந்தபடியே எந்தவிதமான அனாவசியமான செலவுகளுமின்றி ஓட்டுனருக்கான பணிகளை தொடர்ந்து பெற்றுவரலாம் என்பதுதான் ‘ask me drivers” ஆப்பின் முக்கிய அம்சமாகும். உண்மையைச் சொல்லப்போனால் ‘ask me drivers” அப்ளிகேசன் சொந்த கார் உள்ளவர்களுக்கு கால் டிரைவர் தேர்வு செய்து கொள்ளும் முறையை பாதுகாப்பானதாகவும் எளிமையானதாகவும் ஆக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

சொந்த கார் வைத்திருப்பவர்கள் தம்முடைய கார்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயணங்களை சுகமுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கிக் கொள்ளலாம். படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு கூட டிரைவிங் தெரிந்திருந்தால் ask me drivers அப்ளிகேஷன் மூலம் ஒரு கண்ணியமான தொழிலாக ஏற்படுத்திக் கொண்டு தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் தகுந்த பிடித்த வேலை கிடைக்கும்வரை பணி செய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் சொந்த கார் உரிமையாளர்களுக்கும் நல்ல டிரைவர் கிடைக்கவில்லையே என்ற குறை ‘ask me drivers‘ அப்ளிகேஷன் மூலமாக முழுவதுமாக தீர்த்து வைக்கப்படுகின்றது. இந்த ஏற்பாட்டின்படி, காரின் சொந்தகாரர் திறமையான, நன்னடத்தையுள்ள, முன் அனுபவம் நிறையப் பெற்ற ஒரு டிரைவரை இந்த ஆப்ஸ் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேலும் டிரைவர்கள் டிரைவர் ஆப்பில் பதிவு செய்து கொள்ள 9789412658 7358334507 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top