வட கொரியா டோக்கியே ஒலிம்பிக்கில் பங்கேற்காது!
Posted on 07/04/2021
கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது ”டோக்கியா ஒலிம்பிக் வடகொரியா பங்கேற்பதில்லை” என்ற முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தங்களிடம் அதிகாரப்பூா்வமாக வட கொரியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. வட கொரியா- தென் கொரியா இடையே சுமூகமற்ற உறவு உள்ளபோதிலும், கடந்த 2018-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளா்களையும், அரசு அதிகாரிகளையும், ஊடகத்தினரையும் வட கொரியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.