இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தாயார் மறைவு

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தாயார் மறைவு

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தாயார் ‌கரீமா பேகம் உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானார்.

மறைந்த தமிழ் மற்றும் மலையாள திரையுலக இசை அமைப்பாளர் ஆர்கே சேகர் என்பவரின் மனைவியும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் தாயாருமாகிய கரீமா பேகம் உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானார்.
 
65 வயதை கடந்த இவர், சில மாத காலமாக உடல் நலம் இல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் 2 மணி அளவில் இயற்கை எய்தினார். 
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன் தாயார் மீது அளவுகடந்த பக்தியும் அன்பும் மிகுந்தவர். தன்னுடைய வழிகாட்டி தன்னுடைய தாயார் தான் என பொதுவெளியில் பல முறை மனம் திறந்து தெரிவித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அவருக்கு சர்வதேச நாடுகளிலிருந்து ஏராளமான இசை உலக பிரபலங்கள் தங்களது இரங்கல்களை இணையதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top