ஊர்வசியின் ஜே பேபி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஊர்வசியின் ஜே பேபி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபலமான நடிகை ஊர்வசி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'ஜே பேபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ' ஜே.பேபி'. இதில் மூத்த நடிகை ஊர்வசி கலையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் முக்கிய வேடத்தில் நடிகர் தினேஷ், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். வயதான பெண்மணி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை புனைவுகளுடன் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித் தயாரித்திருக்கிறார்.
 
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஊர்வசியின் வித்தியாசமான சிகை அலங்காரத் தோற்றமும், அவருடன் பயணிக்கும் மாறன் மற்றும் தினேஷ் அவர்களின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் 'ஜே.பேபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top