தனுஷின் 'கர்ணன்' டீசர் வெளியீடு

தனுஷின் \'கர்ணன்\' டீசர் வெளியீடு

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், தயாரான 'கர்ணன்' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

'அசுரன்' படத்தின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு 'Black' Buster Star நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'கர்ணன்'. 'பரியேறும் பெருமாள்' என்ற தமிழ் திரை உலகின் முக்கிய படைப்பை உருவாக்கிய கலைஞர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த  'கர்ணன்' படத்தின் டீசர் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியிருக்கிறது.
 
கரிசல் மண்ணின் கந்தக மணத்தை மண்ணுக்கே உரிய செறிவான வீரத்துடன் இந்த 'கர்ணன்' உருவாகி இருக்கிறான் என்பதை படத்தின் டீசர் பறைசாற்றுகிறது. அத்துடன் இந்த டீசரில் 'நீதி சூரியனைப்போல் முளைத்தெழக் கூடியது' என்ற வாசகத்தையும் இடம் பெற செய்திருப்பதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். படத்தின் டீசர் சாதனை படைக்கும் என்பதை சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை உறுதி செய்கிறது.
 
தனுஷுடன் மலையாள நடிகை ரஜீஷா விஜயன், நட்டி என்கிற நட்ராஜ், யோகி பாபு ,லக்ஷ்மி பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். 'அசுரன்' படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கர்ணன்' படத்தையும் தயாரித்திருக்கும் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு,' இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும், இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும்' அறிவித்திருப்பதால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top