தனுஷின் 'கர்ணன்' பட டீசர் வெளியீடு

தனுஷின் \'கர்ணன்\' பட டீசர் வெளியீடு

'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கர்ணன்' படத்தின் டீஸர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கர்ணன்'. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் லால், யோகி பாபு, நட்டி என்கிற நட்ராஜ், நடிகை கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
 
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. ஏப்ரல் 9ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் இந்தப் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே மூன்று மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த டீஸரில் 'கர்ணா ஒருத்தனையும் விடாதப்பா..' என்ற வசனம் பார்வையாளர்களையும், தனுஷின் ரசிகர்களையும் வசப்படுத்தி இருக்கிறது. அத்துடன் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top