நடிகர் வெற்றி நடிக்கும் ஜீவி 2 First Look வெளியானது

நடிகர் வெற்றி நடிக்கும் ஜீவி 2 First Look வெளியானது

நடிகர் வெற்றி நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ஜீவி 2 படத்தின் First Look வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை திரையுலக பிரபலங்கள் வெற்றிமாறன், வெங்கட்பிரபு, கௌதம் மேனன், பிரேம்ஜி அமரன், எஸ்ஜே சூர்யா, நடிகர் சூரி உள்ளிட்ட பலர் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

'ஜீவி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் வி. ஜே. கோபிநாத், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் வெற்றி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கருணாகரன், நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததால் இதன் First Look வெளியிடப்பட்டிருக்கிறது.
 
ஜீவி படத்தின் முதல் பாகத்தில் அறிவார்ந்த நிலையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை முதல் பாகம் உருவாக்கியதால், இப்படத்திற்கான இரண்டாம் பாகமும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில் ஜீவி 2 படத்தின் First Look வெளியாகி இருக்கிறது. இதில் கதையின் நாயகனாக வெற்றி நிலை குத்திய பார்வையுடன் பார்வையாளர்களை பார்வையிட, அவரின் தலையில் இரண்டு கொம்புகளும், முதுகுக்குப் பின்னால் இரண்டு இறகுகளும் அமைக்கப்பட்டிருப்பதால் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும் என்ற தோற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top