நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'ருத்ர தாண்டவம்'

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் \'ருத்ர தாண்டவம்\'

'தல ' அஜித்தின் உறவினரும், நடிகருமான ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'ருத்ரதாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
 
'பழைய வண்ணாரப்பேட்டை', ' திரௌபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. இந்தப்படத்தில் 'திரௌபதி' பட புகழ் நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி புகழ் நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார். பருக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஜுபின் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
'திரௌபதி' படத்தின் வணிக ரீதியிலான வெற்றிக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இயக்குனர் மோகன் ஜியின்  ' ருத்ர தாண்டவம்' என்ற படமும் சமூக கருத்தை மையப்படுத்திய படம் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top