ஜல்லிக்கட்டில் மீண்டும் துள்ளுமா காளைகள்?

ஜல்லிக்கட்டில் மீண்டும் துள்ளுமா காளைகள்?

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும் தமிழரின் வீர விளையாட்டாகவும் இருந்து வருவது மஞ்சு விரட்டு.

நவநாகரீக உலகில், பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட போதிலும் தமிழரின் வீரத்தின் பிறப்பிடமாய் விளங்கிடும் மஞ்சுவிரட்டு, தமிழகம் முழுவதும் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் காளையர்கள் வீரத்துடனும் குதூகலத்துடனும் பங்கேற்று பாரம்பரிய வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு மிகச்சிறப்பாக கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்புவரை நடைபெற்று வந்தது.  ஜல்லிக்கட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடையை சந்திக்க நேர்ந்தது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு வீரர்களும், இதற்காகவே விசேட உணவுகளுடன் ஊக்கம் அளித்து வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளும் சஞ்சலத்துடன் கூடிய ஓய்வினை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதன் காரணமாக சில பராமரிப்பாளர்கள் அவர்களுடைய ஜல்லிக்கட்டு காளைகளை மிகக்குறைந்த அடிமாட்டு விலைக்கு விற்று கைகழுவ வேண்டிய துர்பலமான நிலையும் உருவானது. தமிழகத்தில் பல ஊர்களில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட்டு வந்தாலும், மதுரையைச் சுற்றியுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்திப் பெற்றவையாகும்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் அதே உற்சாகத்துடன் நடத்துவதற்கு டெல்லிவரை சென்று தடை நீக்கம் பெற்று, வருகின்ற தை பொங்கல் நேரத்தில் வழக்கம்போல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

எனவே தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு காளைகள் உற்சாகத்துடன் துள்ளிகுதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top