ரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்பு!

ரஷ்யா இடைநீக்கத்திற்கு உக்ரைன் வரவேற்பு!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதையடுத்து, அந்நாட்டின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார். உலக நாடுகள் வலியுறுத்தியதையடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக 93 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ரஷ்யா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் துணை தூதர் ஜெனடி குஸ்மின்,, ரஷ்யாவிற்கு எதிராக சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஐநா அமைப்புகளில் போர் குற்றவாளிகளுக்கு இடமில்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top