அமெரிக்க துணை அதிபர் உறுதி!

அமெரிக்க துணை அதிபர் உறுதி!

''நாட்டின் ஒற்றுமைக்காகவும், சவால்களை சமாளிப்பதற்காகவும், உறுதியுடன் பணியாற்றுவேன்,'' என, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க துணை அதிபராக, இந்தியாவை பூர்விகமாக உடைய கமலா ஹாரிஸ் நேற்று முன் தினம் பதவியேற்றார். அவர் கூறியதாவது: நாட்டின் ஒற்றுமைக்காகவும், தேசம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், உறுதியுடன் பணியாற்றுவேன். 'சூப்பர் ஹீரோ'க்களாக வளர வேண்டும் என கனவு காணும், சிறுவர் - சிறுமியருக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். சூப்பர் ஹீரோக்கள், நம்மிடையேதான் உள்ளனர். அவர்கள் தான் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள்.
 
அமெரிக்கர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.அமெரிக்காவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கியவர், ஆப்ரஹாம் லிங்கன். நான் இந்த பதவியை அடைந்ததற்கு, நான் பார்த்த, பழகிய கறுப்பின பெண்கள் தான் காரணம். பெண்களின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top