ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனில் சுப்ரோசியாவிலுள்ள ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

உக்ரைனில் சுப்ரோசியாவிலுள்ள ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறுகையில், உக்ரைனின் மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ள டினிப்ரோ ஆற்றங்கரையில் உள்ள எனர்ஹோடரில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையமான ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யப் படைகள் 4 புறங்களில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர் என்றும், ஆலை இப்போது தீப்பிடித்து எரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களைக் கைவிட்டு, நாடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இரு நாட்டுத் தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
மேலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார். 
 
உக்ரைன் அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் ரஷ்யாவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top