கொரோனா அதிகமாகும் - பில்கேட்ஸ்!

கொரோனா அதிகமாகும் - பில்கேட்ஸ்!

அமெரிக்காவில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலகம் முழுவதும் தான் எதிர்பார்த்ததை விட பொருளாதார தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை காரணமாக கொரோனா தொற்றுக்களை பெருமளவில் குறைக்க முடியும் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2015-ம் ஆண்டே கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரஸ் ஆட்டிப்படைக்கும் என கூறியிருந்தார். அவரின் மைக்ரோசாப் நிறுவனம் கொரோனா மருந்து விநியோக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் அடுத்த நான்கு அல்லது ஆறு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது:-அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இறப்புகள் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா நிலைமை மிக மோசமாக இருக்கும். கொரோனாவை விரட்டியடிக்க வேண்டுமானால் மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பாதிப்புகள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top