ATM இல்லமல் பணம் எடுக்கலாம் UPI யின் மூலம் வேலை நடக்கும்

ATM இல்லமல் பணம் எடுக்கலாம் UPI யின் மூலம் வேலை நடக்கும்

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை அறிவித்தார். மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். இந்த வசதி யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அல்லது யுபிஐ மூலம் கிடைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தாஸ் கூறினார்.

இதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும், ஒவ்வொரு வங்கியையும் தொடர்புகொண்டு இந்த வழிமுறை தொடர்பாக பேசவுள்ளாகவும் கூறியுள்ளது.
 
யூபிஐ மூலம் பணம் எடுக்க நாம் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருந்தாலே போதும் என கூறியுள்ளது.
 
இந்த வசதி எப்படி வேலை செய்யும் என்பதையும் ஆர்பிஐ விளக்கியுள்ளது. இந்த புதிய சேவை வருவதன் மூலம் மக்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை எல்லா இடத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோல டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்து நடைபெறும் மோசடிகளும், முறைக்கேடுகளும் குறையும் என கூறியுள்ளது. 
 
இதன்படி நாம் ஏடிஎம்மிற்கு சென்று கார்ட்லெஸ் பணம் எடுக்கும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே ஏடிஎம் ஸ்கிரீனில் க்யூ.ஆர் கோட் வரும், அவற்றை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து, வேண்டிய தொகையை நிரப்பி, யுபிஐ பின் டைப் செய்தால் உடனே ஏடிஎம்மில் இருந்து பணம் வந்துவிடும் என கூறியுள்ளது.
 
கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் அம்சம் ஏற்கனவே ஐசிஐசிஐ, எஸ்பிஐ உளிட்ட வங்கி ஏடிஎம்களில் வந்தாலும், இந்த யூபிஐ வசதி மூலம் பணம் எடுப்பது இந்தியா முழுவதும் பரவலாக்குகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top