சியோமி எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!

சியோமி எம்ஐ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது!

Xiaomi நிறுவனம் சமீபத்தில் சீனாவில் Mi 11 சாதனத்தை ஸ்னாப்டிராகன் 888 ப்ராசெஸ்சார் உடனான முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தில் அடுத்த தலைமுறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இப்போது நிறுவனம் விரைவில் Mi 11 Proவை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. வெய்போவில் (Weibo) வெளியிடப்பட்ட Mi 11 Proவின் படங்களை அடிப்படையாகக் கொண்ட சீன போர்ட்டலின் அறிக்கையானது, Pro வேர்சன் ப்ளூ மற்றும் சில்வர் கலர் வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறுகிறது.

ஆனால் Mi 11 ஃபிளாக்ஷிப்பின் பாலோ-அப் வேர்சனாக (follow-up version) இருந்தாலும், Pro ஸ்மார்ட்போன் அதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், குறிப்பாக கேமராவில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அறிக்கையின்படி, Mi 11 Pro அட்டகாசமான பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், இதில் பெரிஸ்கோப் லென்ஸும் (Periscope lens) அடங்கும் என கூறப்படுகிறது. சாதனம் பற்றி லீக்கான ரெண்டர்களில் 120x zoom அம்சமும் உள்ளது. இதில் நான்கு கேமராக்கள் இருக்கும், அல்ட்ராவைடு லென்ஸில் 35 மிமீ சமமான போக்கல் லேன்த் 12 மிமீ இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top