மார்ச் 15 அறிமுகமாகும் சியோமி 12 சீரிஸ்!

மார்ச் 15 அறிமுகமாகும் சியோமி 12 சீரிஸ்!

சியோமி 12 சீரிஸ் உலகளாவிய வெளியீட்டு தேதி மார்ச் 15 அன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டாஸ் பாதுகாப்பு துளை பஞ்ச் காட்சி வடிவமைப்போடு வருகிறது. சியோமி 12 சீரிஸ் மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சியோமி தனது முதன்மையான சியோமி 12 தொடரை இந்த மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறிப்பிட்ட அறிக்கையில் இந்த சாதனம் மார்ச் 15 அன்று தொடங்கப்படும் என கூறப்படுகிறது. சியோமி தொடர் 12 மார்ச் 15 ஆம் தேதி ஐரோப்பா மற்றும் பிற சந்தைகளில் வரக்கூடும் என ஆண்ட்ராய்டு பிளாண்ட் தெரிவித்திருக்கிறது. இந்த தொடரில் சியோமி 12 மற்றும் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடங்கும் எனவும் அதில் "ஒவ்வொரு காட்சியையும் மாஸ்டர்" என்ற ஸ்லோகத்துடனும் போஸ்டர் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பிராண்ட் இந்தியாவில் இந்த சாதனங்களை அறிமுகப்படுத்துமா இல்லையா என்ற தகவல் தெளிவாகத் தெரியவில்லை.
 
சியோமி 12 தொடர் சாதனமானது மதியம் ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வின் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. பிராண்ட் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை இன்னும் வெளியிடவில்லை. சியோமி 12 தொடர் கடந்த டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளாவிய மாறுபாடுகளின் சில விவரக்குறிப்புகளும் இதற்கு ஒற்றுமையாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
 
சியோமி 12 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம், சியோமி 12 ப்ரோ சாதனமானது க்யூ எச்டி ப்ளஸ் 3200 x 1440 பிக்சல்கள் தீர்மானத்தோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனான 6.73 இன்ச் அமோலெட் எல்டிபிஓ சாம்சங் இ5 டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த சாதனமானது டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவோடு 1500 நிட்ஸ் பீக் பிரகாசத்தை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.
 
இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனமானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ சென்சார் உள்ளிட்ட டிரிபிள் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. சியோமி 12 ப்ரோ ஆனது 4600 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இதில் 50 வாட்ஸ் வரை வேகமான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.
 
சியோமி 12 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், சியோமி 12 ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.28 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது டால்பை விஷன் மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1100 நிட்ஸ் பீக் பிரகாச உச்சநிலை மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. சியோமி 12 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் மேக்ரோ சென்சார் உள்ளிட்ட மூன்று கேமராக்கள் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. சியோமி 12 ஆனது 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. சியோமி 12 சாதனத்தில் 50 வேகமான சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவோடு வருகிறது.

Tags: News, Beauty, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top