செல்போன் அழைப்பை நிர்வகிக்க உதவும் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

செல்போன் அழைப்பை நிர்வகிக்க உதவும் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

செல்போன் அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும்,  குரல்வழி உதவியை ஆதரிக்கவும் உதவும் ஸ்மார்ட் கண்ணாடி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடி, மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பன்சேஷன் (MEMS) மைக், மேக்னெடிக் சார்ஜிங் மற்றும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சங்களை இந்தக் கண்ணாடி கொண்டுள்ளது. இதன் விலை ரூ.5,999 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்ணாடியை https://www.gonoise.com/ என்ற வலைதளத்தில் இருந்து வாங்க முடியும்.
 
Noise Labs இல் உருவாக்கப்பட்ட, ஸ்டைலான, ஸ்மார்ட் கண்ணாடியான Noise i1 ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.
 
எதிர்காலத்தைக் கண்காணித்து, சிறந்த அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்காக எங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளை வடிவமைத்துள்ளோம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டிருக்கும். ப்ளூடூத் 5.1 இணைப்பு வசதியும் இந்த கண்ணாடியில் உள்ளது.
 
நீர்புகாத வகையில் தடுப்பும் இந்தக் கண்ணாடியில் உள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் மாதிரி இந்தக் கண்ணாடியில் வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top