அட்டகாசம் செய்யும் அசத்தலான ரீ-மாடல்ஸ்

அட்டகாசம் செய்யும் அசத்தலான ரீ-மாடல்ஸ்

அசத்தலான லுக், அதிரடியான ஸ்டைல், திரும்பி பார்க்க வைக்கும் சப்தம்.. இது தான் இளைஞர்களின் கார் மற்றும் பைக்குகளின் தேவை. இலட் சம் கொடுத்து கார், பைக் வாங்கினாலும் அத மாடிஃபை பண்ணாதான் கெத்து என ஒரு பக்கம் இளைய தரப்புகள் செல்ராங்க.

முன்பெல்லாம் கார், பைக் பயன்பாடுகள் வேற மாதிரியா இருந்துச்சு. ஆனா இன்னைக்கு வேற லெவல். ஸ்ப்லெண்டர் இருந்த வீட் டில எல்லாம் இன்னைக்கு புல்லட் பைக்ஸ் அலங்கரிக் குது. அத்தோடு மக்கள் மத்தி யில் இன்னைக்கு கார் வாங் குறது ரொம்ப ஈசியான ஒண்ணு ஆயிடுச்சு. இதனால யார் கார் எதுனே தெரியாத அளவுக்கு ஒரு நிலை வந்து டுச்சு. எல்லாத்துலயும் தனித் துவம் விரும்புற மக்கள் கார், பைக்குகளிலும் தனித்துவம் விரும்பி தான் எங்க கிட்ட வரங்க! என ரீ-மாடலிங் களில் தென்தமிழக அளவில் அசத்திக் கொண்டிருக்கும் டூயல் ப்ரோஸ் அருண் மற்றும் அஜய் வேல்ராஜ் சொல்றாங்க.

ஆயர்கலை 64 என்று சொல்வார்கள், அதே வரிசை யில ரீ-மாடலிங்கையும் சேர்த்துடலாம் போல. அந் தளவிற்கு இதுக்கு பிரியர்களும் இருக்காங்க என தொடங்குகிறார் திரு. அருண். மதுரை பாண்டி கோவில் சாலையில் சிவன் கரேஜ் ஆட்டோ எக்ஸ் கல்ப்ட் என்னும் ரீ-மாடலிங் கரேஜ் ஒன்றை ஹைப்பர்- பிசியாக நடத்தி வருகின்ற னர் திரு. அருண் மற்றும் திரு. அஜய் அவர்கள்.

‘சின்ன வயசுல இருந்து எங்களுக்கு கார், பைக்ஸ் மேல ஆர்வம் அதிகம் அதனாலேயே கோவையில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படிச்சோம். நாங்க படிச்ச நேரத்துலதான் யமாஹா, பஜாஜ் போன்ற நிறுவனங்கள் சூப்பர் பைக் களை லான்ச் பண்ணாங்க. வந்த நேரத்திலேயே கோவையில் அதிகமாக ரீ-மாடலிங் மோகம் வந்து டுச்சு. அத்தோட பலரும் சென்னைக்கு போய்  தங் களின் கார், பைக்குகளை ரீ-மாடல் செய்ய தொடங்கு னாங்க. அப்போ என்னு டைய நண்பர்கள் சிலரின் அறிமுகத்தால ரீ-மாடலிங் பத்தி நானும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அதுதான் இன்னைக்கு ஆட்டோ எக்ஸ் கல்ப்டா வளர்ந்திருக்கு.

2009ம் ஆண்டு என்னு டைய கல்லூரி படிப்பை முடிச்சுட்டு எந்த ஒரு கமிட்மெண்ட்டும் இல்லாம நம்பிக்கை மட்டும் முதலீடாப் போட்டு அண்ணா நகர்ல தொடங்கினோம். ரீ-மாடலி ங்-கு மதுரை ரொம்ப புதுசு அப்போ! அத்தோட சென்னை, கோவை போல இங்க பெருசா தொடங்கத் துல வரவேற்பு இல்லாம இருந்துச்சு. என்ன பண்ண லாம்னு நினைக்கிறப்பதான் ஒரு ஐடியா வந்துச்சு. ஒரு லைவ் எக்சாம் பிள். எங் கிட்ட ஒரு லான்சர் கார் இருந்துச்சு. அதுல ஆடியோ சிஸ்டம் மட்டுமே ஒரு இலட்சம் ரூபாய்க்கு செய்தோம். அத்தோட இன் டீரியர் வொர்க்ஸ், எக்ஸ்டீரி யர் பெயிண்டிங், பெர்பா மண்ஸ் என எல்லாவற்றை யும் மாற்றினோம். இதுதான் எங்களுக்கு பெரிய மைலேஜ் அளிச்சுது’னு சொல்லிக் கொண்டிருக்க திரு. அஜய் அவர்கள்: ‘மதுரையப் பொருத்தளவு இவ்வளவு வர வேற்பு கிடைக்கும்னு தொடங்குனப்ப நெனச்சுப் பாக்கல. எங்க அப்பா திரு.வேல்ராஜ் அவரு ஒரு பிஸ்னஸ் பண்ணிட்டு இருந் தாலும், ஓய்வு நேரத்துல எங் களுக்கு உதவியா இங்க வந்துடுவாரு.’ என்றார்.

மேலும் தொடங்கிய திரு.அருண் அவர்கள், ‘மிக குறுகிய காலத்தில மக்களின் ஆர்வம் ரீ-மாடலிங்கில் அதி கரிக்கத் தொடங்கியது. எனவே, 2013ம் ஆண்டு அண்ணாநகரிலிருந்து மதுரை பாப்பீஸ் ஹோட்டல் அருகில் கரேஜ் ஒன்றை கட்டி இங்க ஷிப்ட் ஆயிடோம். இன்னைக்கு அதிகமாக இளைஞர்கள், கார் பிரியர் கள், டாக்டர்ஸ், மற்றும் ஐடி நிறுவனங்களில் வேலைப் பார்ப்பவர்கள் தான் எங்க கஸ்டமர்ஸ்.

அதிலும் இன்டீரியர்ஸ்ல சீட் கவர்ஸ் தான் மக்கள் அதி கம் விரும்புறது. ஒரு தடவ நம்ம போட்ற சீட் கவரதான் நம்ம கார் வைச்சுருக்க வரை இருக்கும். அதுக்கு தாங்க சில ஸ்பெஷல்ஸ் சேத்திருக் கோம். அடுத்து எக்ஸ்டீரியர் பெயிண்டிங், கார் முழுவதுமே ஸ்டிக்கரால் மாற்றுவது, லைட்ஸ், ஹார்ன் என எல் லாமே செய்றோம்.

அடுத்தப்படியா பைக்ஸ் இன்னைக்கு ஆலட்ரேஸ னுக்கு அதிகம் வருது. அதிலும் அதிகமாக புல்லட் தான் மாஸ் காட்டுது. அப்பியரன்ஸ் மாடிபிகேஷல இருந்து சவுண்ட் மாடி பிகேஷன் வரை எல்லாமே புல்லட் ஸ்பெஷலா இருக்கு.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top