ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை செலுத்தி உலக சாதனை படைத்த ISRO!

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை செலுத்தி உலக சாதனை படைத்த ISRO!

ஒரே நேரத்தில் அதிக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு இந்‌த சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா செலுத்தியதுதான் இப்போதைய சாதனையாக இருக்கிறது.

இஸ்ரோவைப் பொறுத்தவரை இதற்குமுன் ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரேல், கஜகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்‌கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோளையும், இந்தியா சார்பில் 2 மற்றும் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

Tags: News, Art and Culture, Academy

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top