whatsapp யில் டெலிட்டான மெசேஜை எப்படி பார்ப்பது?

whatsapp யில் டெலிட்டான மெசேஜை எப்படி பார்ப்பது?

இன்ஸ்டன்ட்  மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பை மில்லியன் கணக்கிலான பயனர்கள் பயன்படுத்தி வருகினறனர். இந்தியாவிலும் இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த செயலியானது அரட்டைக்கு மட்டுமின்றி, புகைப்பட வீடியோக்களை பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பவும் பயன்படுகிறது.

WhatsApp அதன் பயனர்களுக்கு பல சிறந்த அம்சங்களை அளித்துள்ளது. அவ்வப்போது வெளியிடப்படும் மேம்பட்ட பதிப்புகளின் மூலம் பயனர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்ட தான் செய்தியை நீக்குதல் (Delete for everyone) அம்சம்.
 
குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் அனுப்பும் மெசேஜை பயனர்கள் டெலிட் செய்யலாம் .டெலிட்டான  மெசேஜை பெற்றவரோ, அனுப்பியவரோ அதை மீண்டும் பார்க்க முடியாது. ஏனெனில், அதிகாரப்பூர்வ செயலியில் இதற்கான எந்த அம்சமும் இல்லை. இருப்பினும், பயனர்கள் ஒரு எளிய தந்திரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்ட மெசேஜ்கள் , ஆடியோ மற்றும் வீடியோவைப் பார்க்கலாம். அந்த Whatsapp trick என்ன என்பதை பார்க்கலாம்.
 
ஒரு பயனர் ஒரு செய்தியை சில நொடிகளில் நீக்கிய பிறகு, அது என்ன செய்தி என்று நீங்கள் ஆச்சரியத்துடன் யோசித்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும், இந்த செய்தியைப் பார்க்க வாட்ஸ்அப்பில் எந்த அம்சமும் இதுவரை வழங்கப்படவில்லை. அதன் பிறகு, பயன்பாட்டிற்கு தேவையான அனைத்திற்கு அனுமதி வழங்கவேண்டும். அனைத்திற்கு 'Allow' என்பதை கிளிக் செய்ய வேண்டும். செயலிக்கு தேவையான அணுகல்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, செயலி சிறப்பாக தன் வேலையை செய்யத் தொடங்கும். இதற்கு நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்தால் மட்டுமே, இந்த வசதியை பயனர்கள் பெற முடியும். கூகுள் Play Store-இல் இருந்து, நீங்கள் WhatsDelete என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும். பயன்பாட்டை அனுமதித்த பிறகு, நீங்கள் வாட்ஸ்அப்பில் சில Settings-இல் மாற்றம் செய்ய வேண்டும்.

Tags: News, Hero, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top