கூகுளின் புதிய வசதி!

கூகுளின் புதிய வசதி!

கூகுள் நிறுவனம், செல்போன்கள் மூலம் சுவாசத்தின் அளவு மற்றும் இதயத்துடிப்புகளை அறிந்துகொள்ளும் வசதியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கூகுள் பிட் செயலியை (Google Fit App) உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்போது பிளேஸ்டோரில் இல்லை. அடுத்த மாதத்துக்குள் அனைத்து ஆன்ட்ராய்டு யூசர்களும் பயன்படுத்துமாறு, அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கூகுள் பிட் ஆப் மூலம் இதயத்துடிப்பை தெரிந்துகொள்ள விரும்பினால், கேமரா லென்ஸ் மீது உங்களின் விரலை வைக்க வேண்டும். அப்போது சருமத்தின் நிறம் மாறும். அதன் அடிப்படையில் உங்கள் இதயத் துடிப்பு எவ்வளவு என்பதை கேமரா மூலம் அறிந்து கொள்ளலாம். சுவாசத்தின் அளவை தெரிந்துகொள்ள விரும்பினால், கூகுள் பிட் ஆப் மூலம் கேமராவை ஆன் செய்து, உங்களின் இதயப்பகுதிக்கு நேராக முகம்பார்த்தவாறு பிடிக்க வேண்டும். அப்போது, இயல்பாக எப்போதும்போல் சுவாசியுங்கள். சென்சார் மூலம் உங்களின் சுவாசத்தின் அளவை கண்டறிந்து, அதன் அளவு திரையில் காண்பிக்கப்படும். மேலும், உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரியின் அளவையும் தெரிந்துகொள்ளலாம்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top