எலான் மஸ்கின் புதிய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்!

எலான் மஸ்கின் புதிய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம்!

MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதுபற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
 
அதன்படி இந்நிறுவனம் அண்மையில் telepathy என்ற முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படையில் குரங்கை விளையாட வைத்துள்ளனர். மேலும் சிறப்பாக விளையாடிய பேஜர் (pager)) என்ற அந்த குரங்குக்கு வாழைப்பழம் பரிசாக கொடுக்கப்பட்டது. தற்சமயம் இந்த வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது என்று தான் கூறவேண்டும்.
 
எலான் மஸ்க் தொடர்ந்து தனது கனவுத்திட்டங்களான உட்சபட்ச வேக ஹைப்பர் லூப் பயணம், அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்கள், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என அனைத்திலும் கவனம் செலுத்தி முன்னோக்கி செல்கிறார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top