தண்ணி.. எண்ணெய் இல்லாமல் எளிதாக சமைக்கலாம்!!

தண்ணி.. எண்ணெய் இல்லாமல் எளிதாக சமைக்கலாம்!!

அன்றாடப் பொருட்களின் விலைவாசி என்பது ஏறுமுகமாகவேதான் இருந்துவருகிறது. அதிலும் எண்ணெய், காய்கறிகளின் விலையைப் பற்றி சொல்லத்தேவையே இல்லை. நம்முடைய ஊரைப் பொருத்தவரை தாராளமாக எண்ணெய் ஊற்றி கமகமவென பக்கத்து தெருவரை மணக்கும் அளவிற்கு சமைப்பதுண்டு.

சமையலுக்கு மூலதனமே எண்ணெய்யும், தண்ணீரும் தான். ஆனால் தண்ணீர் மற்றும் எண்ணெய் இல்லாமல் சமைக்க முடியும் என சவாலை முன்வைக்கிறார் ஜெர்மன் நாட்டை சார்ந்த ஏஎம்சி குக்வேர் நிறுவனத்தின் மதுரை டீலரான திருமதி. மும்தாஜ் அவர்கள். ‘நம்முடைய தமிழகத்தை பொருத்தவரை உணவு என்பதைவிட சுவையான உணவு என்பதற்கே அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். பெரும்பாலும் சுவையை அதிகப்படுத்த வேண்டுமென அதிகமான எண்ணெய், மசாலாவை சேர்த்துக்கொள்கிறோம். இது நமக்கு எதிர்காலத்தில் சில உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

நம்மில் பெரும்பாலானோர், காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வேக வைப்போம். அப்படி வேகவைக்கும்போது காய்களின் சுவை மற்றும் அந்த காய்களின் உள்ள சத்துகளும் தண்ணீரில் கலந்துவிடும். இதனால் நமக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ் போன்றவை தண்ணீரில் கலந்து வீணாகி விடுகிறது. இதனால் நமக்கு போஷாக்கு கிடைப்பதில்லை.

மேலும், நம்முடைய சமையல் என்று வந்து விட்டாலே எண்ணெய் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதிகப்படியான எண்ணெய் கொலஸ்ட்ரால் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சமையலிவிருந்து தொடங்காமல் சமைக்கும் முறையிலேயே தொடங்கவேண்டும்.

உயர்ரக ஸ்டெயான்லெஸ் ஸ்டீலாக கருதப்படும் சர்ஜிக்கல் ஸ்டீல் கொண்டு தண்ணீர் மற்றும் எண்ணெய் இல்லா சமையல் முறையை எளிதில் கையாள வைக்கிறது ஜெர்மன் நாட்டை சார்ந்த ஏஎம்சி குக்வேர் நிறுவனம்.

ஆரோக்கியம் என்பதையே அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த சமையல் பாத்திரங்கள் தமக்கென தனிச்சிறப்பாக தண்ணீர் மற்றும் எண்ணெய் இல்லா சமையல் முறையை உலகளவில் சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இன்று ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. தங்களின் உடலில் தேவையற்ற கலோரிக்களை கரைப்பதற்காக பல உடற்பயிற்சிகளையும், நடைப்பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். நாம் அன்றாட உணவில் எண்ணெயைக் குறைத்துக் கொண்டாலே தேவையற்ற கலோரிகள் உருவாகாது. நாம் சாதாரண பாத்திரத்தில் 100% எண்ணெயைப் பயன்படுத்தினால், ஏஎம்சியில் 20% மட்டுமே தேவைப்படும். இதனால் உடலில் தேவையற்ற கலோரி சேரும் வாய்ப்பானது இல்லாமலே போய்விடுகிறது.

அத்தோடு இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் ஏஎம்சி தயாரிப்புகள் ஸ்மார்ட் சமையல் பாத்திரங்களாக செயல்படுகிறது.

மூன்று முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. Akkutherm-Base பாத்திரத்திற்குள் இருக்கும் சூட்டை சரியான முறையில் பரவ செய்கிறது. Sensotherm பாத்திரத்தில் உள்ள சூட்டை கணிக்கிறது. இறுதியாக Visiotherm சமையல் நிலையை நமக்கு காட்டும் ஒரு அளவைக் கருவியாக செயல்படுகிறது. இதனால் நேரம் மிச்சமாவதோடு சுமார் 50% சமையல் எரிவாயுவையும் மிச்சமாகிறது.

இத்தனை வசதிகளையும் சவுகரியங்களையும் கொண்டுள்ள இந்த பாத்திரங்கள் 30 ஆண்டுகள் கேரண்டியோடு கிடைக்கிறது. இது இந்த பாத்திரங்களை நாம் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம் என்பதை நமக்கு தெளிவுபடுத்திவருகிறது.’ என கூறினார்.

மேலும், ‘இந்த தயாரிப்பு வீட்டின் பயன்பாட்டிற்கும் சரி, சிறு ஹோட்டல் தொழில் நடத்துவோருக்கும் சரி நல்ல ஒரு சேமிப்பை நிச்சயம் அளித்திடும். இதுபோன்ற தயாரிப்புகள் தென்தமிழகத் திற்கு மகிவும் புதியனவாக தோன்றும். எனவே இதற்காக டெமோவையும் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று செய்துகாட்டுகிறோம். அத்தோடு விருப்பமுள்ளோர் டீலர்களாகவும் வரவேற்கிறோம்.’ என மேலும் கூறினார்.

தொடர்புக்கு: 9047008687

 

Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top