வாட்ஸ்அப் ஆதரவை இழக்கும் சாதனங்கள்!

வாட்ஸ்அப் ஆதரவை இழக்கும் சாதனங்கள்!

வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், iOS 9-ல் இயங்கும் ஐபோன்களில் வேலை செய்வதை நிறுத்தக்கூடும் என்று வாட்ஸ்அப் டிராக்கர் WABetaInfo வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தகவல் கசிந்துள்ளது. வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது. வாட்ஸ்அப் அதன் FAQ பக்கத்தில் இந்த மாற்றம் குறித்து இதுவரை ஏந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை.
 
ஆனால் செயலியின் இந்த புதிய வெர்சன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது இது புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4s ஆகிய ஸ்மார்ட்போன்கள் பிரபலமான மெசேஜிங் ஆப்க்கான ஆதரவை இழக்கும். இதையடுத்து ஐபோன் 5 மாடல்கள் இப்போது வாட்ஸ்அப்பை இயக்கக்கூடிய மிகப் பழமையான ஐபோனாக மாறும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் 5 ஸ்மார்ட்போன்களை iOS 10.3 வெர்சன் வரை அப்டேட் செய்துகொள்ள முடியும்.
 
இதுதவிர ஆண்ட்ராய்டு போன்களைப் பொறுத்தவரை, அண்ட்ராய்டு 4.0.3 வெர்சன் அல்லது புதிய வெர்சன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் தற்போது சப்போர்ட் செய்கிறது. எனவே இந்த வெர்சனை கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். IOS மற்றும் Android தவிர, வாட்ஸ்அப் KaiOSலும் இயங்குகிறது. இது ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட பல பீச்சர்டு போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top