வாட்ஸ்அப்பில் ஆடியோ - வீடியோ காலிங்!

வாட்ஸ்அப்பில் ஆடியோ - வீடியோ காலிங்!

வாட்ஸ்அப்பின் கம்ப்யூட்டர் வெர்ஷன் ஆன வாட்ஸ்அப் வெப்பில் வீடியோ / வாய்ஸ் கால் அம்சத்தினை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்நிறுவனம் மேற்கூறப்பட்டஅம்சத்தை அதன் பீட்டா டெஸ்ட் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த அம்சம் முதன்முதலில் வாட்ஸ்அப்பிற்கான பீச்சர் ட்ராக்கரான WABetaInfo மூலம் கடந்த அக்டோபரில் காணப்பட்டது, தற்போது இது அதிகாரப்பூர்வமாக டெஸ்க்டாப் அப்பில் அடியெடுத்து வைத்துள்ளதுபோல் தெரிகிறது.
 
வெப் வெர்ஷன் மற்றும் டெஸ்க்டாப் ஆப் ஆகிய இரண்டுமே இந்த அம்சத்தைப் பெறுகின்றன, ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே இது அணுக கிடைக்கின்றன.
 
WABetaInfo-வின் படி, டெஸ்க்டாப் அப்ளிகேஷனே பீட்டா சோதனைக்கு அதிக முன்னுரிமையைக் கொண்டுள்ளது, எனவே உங்களுக்காக இந்த அம்சம் வெப்பில் கிடைக்கவில்லை எனில், ஆப்பிற்குள் அதைச் சரிபார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகின்றது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top