டாடாவின் அட்டகாசமான புதிய வரவு!

டாடாவின் அட்டகாசமான புதிய வரவு!

பைக்-லவ்வர்ஸ் போல இன்று நம்முடைய ஊர்களில் கார் லவ்வர்-சும் அதிகரித்துவிட்டார்கள். பல அசத்தலான ஆப்ஷன்களோடு, அட்டகாசமான சவுகரியத்தோடு பல கார்கள் இன்று இருந்தாலும், நம்முடைய இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக டாடா புதிய ஒரு உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் ஜெர்மன் மற்றும் கொரியன் கார்களோடு போட்டியிடும் வகையில் டாடா அறிமுகப்படுத்தியுள்ள கார் தான் டாடா டீயாகோ. இந்த டாடா டீயாகோ பற்றி அறிந்துக்கொள்ள டாடாவின் மதுரை, ராமநாதபுரம், காரைக்குடியின் டாடா கார்ஸ் டீலரான சக்தி மோட்டார்ஸிற்கு விரைந்தோம். பல ஆண்டுகளாக சிறப்பான முறையில் தரமான சேவையை அளித்துவரும் சக்தி டாடா, தற்போது வாடிக்கையாளர்களின் அதிகப்படியான ஆதரவினால் தற்போது கமர்ஷியல் டாடா வாகனங்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு மாற்றியுள்ளனர். டாடா என்றாலே டாக்ஸி தான் என்கிற ஒரு அடையாளத்தை மாற்ற டாடா எடுத்துள்ள இந்த அதிரடி முடிவானது கார் பிரியர்களை தன்வசம் திருப்பியுள்ளது. அந்த வகையில் மிட்சைஸ் காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக் மென்ட்டில் நடக்கும் பரபரப்பான ஆட்டத்தில் மாற்றம் கொண்டுவர, முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் டீயா கோவை களம் இறக்க இருக்கிறது டாடா. டிஸைன்.

இந்த டீயாகோ வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதுமையான, இதுவரை அவர்கள் பார்த்திராத ஒரு டாடா காரை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கத்தோடு முழுக்க முழுக்க இங்கிலாந்து மற்றும் இத்தாலியின் டிஸைன் ஸ்டுடியோக்களில் இந்த காரை டிஸைன் செய்திருக்கிறார்கள், டாடா இன்ஜினீயர்கள். டிஸைன் முற்றிலும் புதிதாக இருக்க வேண்டும் என்பதால், டாடாவின் இலச்சினையை, அதாவது லோகோவைக்கூட இந்த காருக்காக 3D தோற்றம் கொண்டதாக மாற்றியிருக்கிறார்கள். டீயா கோவை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, இதன் வீல் ஆர்ச்சும், 14 இன்ச் அலாய் வீல்களும் இதற்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக் கொடுக்கின்றன. இதன் ஷோல்டர் லைன் மற்றும் வெய்ஸ்ட் லைன் ஆகியவையும் கவர்ச்சியாக இருக்கின்றன. டீயாகோவின் ஹைலைட்டே அதன்பின் பக்கத்தோற்றம்தான். இதன் அட்டகாசமான ஸ்பாய்லர், ரசனையுடன் செதுக்கப்பட்டிருக்கும் டெயில் கேட், டெயில் லைட்ஸ் என அனைத்துமே நம்மை கவர்கின்றன.

உள்ளலங்காரம்:

உண்மையான ஆச்சரியம் காரின் கேபினுக்குள் தான். ‘இது டாடா காரா?’ என்று வியக்கும் அளவுக்கு, இதன் சீட் ஃபேப்ரிக் மற்றும் ரூஃப் லைனிங், டேஷ்போர் டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸ் மற்றும் திருகுகள் என அனைத்துமே தரமானதாக இருக்கின்றன. ஸ்போர்ட்டியான ஃபீலிங் கொடுக்க வேண்டும் என்பதால், ஸ்டீயரிங்வீல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதை மனதில் வைத்து, டேஷ் போர்டு மற்றும் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது காரை மேலும் விசாலமானதாகக் காட்டுகிறது. காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹர்மான் நிறுவனத்தின் Infotainment மற்றும் ப்ளூ-டூத் வசதிகள் கொடுக்கப்பட்டுளளன. மொபைல் போன் அல்லது பென்டிரைவ் ஆகியவற்றை இணைத்துக் கொண்டால், நாம் விரும்பும் பாடலை இதன் 4 ஸ்பீக்கர்களும், 4 ட்வீட்டர்களும் அட்டகாசமாக அலற விடுகின்றன. காரில் நான்கு பேர் பயணித்தால், நான்கு பேரின் மொபைல் போனையும் இதோடு இணைத்துக்கொள்ள முடிகிறது. இன்ஜின் பெட்ரோல் - டீயாகோவில் டாடா பொருத்தியிருப்பது முற்றிலும் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின். ‘சிட்டி’ மற்றும் ‘எக்கோ’ என்று இரண்டு விதமான செட்டிங்கில் வைத்து ஓட்ட முடியும். இது 6,000 ஆர்பி எம்-ல் 83.8bhp சக்தியை யும் 11.6kgmடார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை 15.27 விநாடிகளில் கடக்குப்போதுமான அளவுக்கு சக்தியைக் கொடுக்கிறது.

30-50 கி.மீ வேகத்தை டீயாகோ 5.26 விநாடிகளில் எட்டிவிடுகிறது. அதேபோல, 50 - 70 கி.மீ வேகத்தை 7.86 விநாடிகளில் எட்டிவிடுகிறது. இதுதான் ஸீகா இன்ஜினின் திறன் என்று சொல்லும்போது,  எக்கோ செட்டிங்கில் வைத்து ஸீகாவை ஓட்டினால், அது ARAI கணக்குப்படி லிட்டருக்கு 23.5 கி.மீ கொடுப்பதாக டாடா சொல்கிறது.

பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரைப்போலவே, டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட டீயாகோ காரும் ‘சிட்டி’ மற்றும் ‘எக்கோ’ என்று இரண்டு விதமான செட்டிங்கில் வைத்து ஓட்ட முடியும். 4,000 ஆர் பிஎம்-ல் 69bhp சக்தியையும் 14.27kgm டார்க்கையும் கொடுக்கும் ஸீகாவின் ரெவோடார்க் இன்ஜின் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top