4 ஆப்ஸ்களை டெலிட் செய்ய வேண்டுகோள்

4 ஆப்ஸ்களை டெலிட் செய்ய வேண்டுகோள்

ஓர் எச்சரிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்தது. அதாவது சில போன் பயன்பாடுகளை பாகிஸ்தானிய முகவர்கள்  தீம்பொருள்களை (மால்வேர்) அனுப்புவதன் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தது. அதன் படி 4 ஆப்ஸ்களை முக்கியமாக டெலிட் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியர்கள் அனைவரும் குறிப்பிட்ட 4 ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் இந்திய உள்துறை அமைச்சகம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நான்கு ஆப்ஸ்களின் விவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1) டாப் கன் (Top Gun) என்ற கேமிங் ஆப்,
2) எம்பிஜூன்கீ (Mpjunkie) என்ற ம்யூசிக் ஆப்,
3) பிடிஜூன்கீ (Bdjunkie) என்ற ஒரு வீடியோ ஆப் மற்றும்
4) டால்க்கிங் ப்ராக் (Talking Frog) என்றவொரு பொழுதுபோக்கு ஆப் ஆகியவைகளாகும்.
இவை அனைத்தும் ஹேக்கர்கள் மூலமாக மொபைல் கட்டண விவரம் உட்பட ஸ்மார்ட்போன்களில் உள்ளீடப்பட்டுள்ள அல்லது சேமித்து வைத்திருக்கும் எந்தவொரு தனிப்பட்ட விவரத்தையும் திருடிக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ராணுவத்தை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்து ஸ்மேஷ்ஆப் (SmeshApp) என்ற ஒரு பயன்பாடு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப் மூலம் இராணுவம் தகவல் சம்பந்தப்பட்ட ஒருவரின் இயக்கங்கள், தொலைபேசி அழைப்புகள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவைகளை திருட முடியும். இந்த இணைய மோசடிக்கு பின்னால் இண்டர் சர்வீஸஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஈடுபட்டிருப்பது வெளிப்படையாக தெரிய வந்ததுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top