பிற மொழியினருக்கு தமிழை கற்பிக்க புதிய செயலி!

பிற மொழியினருக்கு தமிழை கற்பிக்க புதிய செயலி!

தமிழக சட்டபேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடபட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் அயல் நாட்டவர்கள், அண்டை மாநிலத்தவர்கள், தமிழ் தெரியாதவர்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளிலும் உலக பொது மொழியான அங்கில மொழி தெரிந்தவர்கள், தாய் தமிழ் மொழியை சுலபமாக கற்றுகொள்ளவதற்காக பாட நூல்களையும் பன்மொழி அகராதிகளையும் உள்ளடக்கிய திறன்மிகு குறுஞ்செயலி உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ் வளர்ச்சி கொள்கைவிளக்க குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும், தமிழ் சொற்கள் குறித்த சந்தேகம் இருப்பவர்கள் 14469 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாம் என தமிழ் வளர்ச்சி கொள்கை குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
 
அதன்படி, சொற்குவை கட்டணமில்லா அழைப்பு மையம் அமைக்கபட்டு இருக்கிறது என்றும் பொது மக்கள் மேற்கண்ட இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளாம் என்றும் இந்த சேவை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வருவதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் தமிழ்ச் சொற்கள் குறித்த சந்தேககங்களை எழுப்பி அதற்கான விடைகளை அறியலாம் என்றும், ஆங்கிலத்திற்கு நிகராக தமிழ்ச்சொற்களுக்கான விடைகளையும் அறியலாம் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top