புதுக்கட்சி துவங்க உள்ளாரா மு.க.அழகிரி!
Posted on 21/12/2020
சென்னை அறிவாலயத்தில், அண்மையில் மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, 'அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'கட்சி தலைமை முடிவு செய்யும்' என்றார் நேரு. இந்நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து, சென்னைக்கு காரில் வந்தார்; ஒரு வாரம் சென்னையில் தங்குகிறார்.