கோவை வேட்பாளர்கள் கலக்கம்!

கோவை வேட்பாளர்கள் கலக்கம்!

கடந்த சட்டசபைத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை விட, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம், 1,332 ஓட்டுகளே அதிகமாக பெற்று, வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனார். இதேபோல், சிங்காநல்லுார் தொகுதியிலும், அ.தி.மு.க., வேட்பாளரை விட, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக், 5,180 ஓட்டுகளே அதிகம் பெற்று, எம்.எல்.ஏ., ஆனார். நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகளை கணக்கிடும்போது, இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவு.

தற்போதைய தேர்தலில், 30 லட்சத்து, 82 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலை காட்டிலும், 2 லட்சத்து, 48 ஆயிரத்து, 146 வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் புதிதாக வாக்காளர்கள் சேர்ந்திருப்பதால், அவர்கள் யாருக்கு ஓட்டுப்போடுவார்கள் என கணிக்க முடியாத சூழல் இருக்கிறது. அதனால், வேட்பாளர்கள் பலரும் பீதி அடைந்துள்ளனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top