அ.தி.மு.க.வின் அதிரடி தேர்தல் அறிக்கை!

அ.தி.மு.க.வின் அதிரடி தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ல் நடக்கிறது. களத்தில் பிரதான போட்டியாளராக பார்க்கப்படும், தி.மு.க., தரப்பில், நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியாகி, அக்கட்சியினரை மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தையும் ஆச்சரியப்பட வைத்தது. 'காஸ்' சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச, 'டேப்லெட்' - டவுன் பஸ்களில் மகளிருக்கு, 'ஓசி' பயணம் என, 'அடடே' அறிவிப்புகள் அதிகளவில் இருந்தன.

ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதற்கு ஈடுகொடுக்குமா என்ற, எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியானது. ராகு காலம் முடிந்து, நேற்று மாலை, 6:20 மணிக்கு, சென்னை கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வரும், துணை முதல்வரும், அதிரடி வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
 
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * அனைவருக்கும் இலவச வீடு, * ரேஷன் கார்டுதாரருக்கு மாதம், 1,500 ரூபாய், * ஆண்டுக்கு ஆறு, 'காஸ்' சிலிண்டர் இலவசம், * ரேஷன் பொருட்கள், 'டோர் டெலிவரி', * வீட்டுக்கு வீடு, 'வாஷிங் மெஷின், சோலார்' அடுப்பு, * கட்டணமின்றி கேபிள், 'டிவி' இணைப்பு, * வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, * திருமண தம்பதிக்கு, 'அம்மா சீர்வரிசை', * கல்லுாரி மாணவருக்கு, 2 ஜி.பி., இலவச டேட்டா
 
இப்படி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்தல் களத்தையே அதிர வைத்திருக்கிறது, ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை. அதுமட்டுமின்றி, உலக தரத்தில், 10 சர்வதேச பல்கலைகள்; கல்லுாரி மாணவியர் டூவீலர் வாங்க, மானியம்; மகளிருக்கு பஸ் கட்டண சலுகை; விவசாயிகளுக்கு, 7,500 ரூபாய் உழவு மானியம் என, அடுக்கடுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top