ஜிம்பாப்வேயின் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள்!

ஜிம்பாப்வேயின் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள்!

2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர்) ஆட்டங்களை அந்த ஆண்டின் ஜூன் 18 முதல் ஜூலை 9-க்கு உள்ளாக ஜிம்பாப்வே நடத்தவுள்ளது. 

கொரோனா சூழல் காரணமாக சில ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டதன் அடிப்படையில் திருத்தப்பட்ட அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. 
 
2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவுடன் சேர்ந்து சூப்பர் லீக் பிரிவில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக போட்டிக்குத் தகுதிபெறுகின்றன. 
 
சூப்பர் லீக் பிரிவின் கடைசி 5 இடங்களில் இருக்கும் அணிகள் உலகக் கோப்பை குவாலிஃபயரில் விளையாடவுள்ளன. அதேவேளையில் "லீக் 2' பிரிவில் இருக்கும் முதல் 3 அணிகளும் இந்த குவாலிஃபயரில் பங்கேற்கும். 
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top