என்னை கவர்ந்த தமிழ் நடிகர் - கிரிக்கெட் தல தோனி

என்னை கவர்ந்த தமிழ் நடிகர் - கிரிக்கெட் தல தோனி

கிரிக்கெட் தல என்று அழைக்கப்படும் தோனி நேற்று நடைபெற்ற TNPL கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது கோலிவுட்டில் தனக்கு பிடித்தமான நடிகர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தனக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்றும் ரஜினியை அடுத்து தன்னை கவர்ந்த நடிகர் சூர்யா என்றும் தோனி தனது பேட்டியில் கூறினார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி மிக அதிகமாக சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து டிரெண்டு ஆக்கியுள்ளனர்.

ஏற்கனவே சூர்யா நடித்த '24' படத்தில் தோனியுடன் சூர்யா செல்பி எடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Sports

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top