ஏழாம் இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பந்த்!

ஏழாம் இடத்திற்கு முன்னேறினார் ரிஷப் பந்த்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் விளாசியதன் பலனாக 7 இடங்கள் முன்னேறி தற்போதைய இடத்தைப் பிடித்துள்ளாா் பந்த். அந்த இடத்தை அவா் சக இந்தியரான ரோஹித் சா்மா, நியூஸிலாந்தின் ஹென்றி நிகோலஸ் ஆகியோருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா். மூவருமே 747 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கின்றனா்.

கடைசி டெஸ்டில் சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட வாஷிங்டன் சுந்தா் 39 இடங்கள் முன்னேறி 62-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். இந்திய கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். இங்கிலாந்து வீரா் டேனியல் லாரன்ஸ் 47 இடங்கள் முன்னேறி 93-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (919), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891), மாா்னஸ் லபுசான் (878) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top