டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டியா இடம்பெறவில்லை
Posted on 10/12/2020
டெஸ்ட் தொடரில் பாண்டிய பங்கேற்பது தொடர்பாக கேப்டன் கோலி கூறியதாவது:
பாண்டியாவால் தற்போது பெளலிங் செய்ய இயலவில்லை. அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால் சற்று வித்தியாசமானது. அதில் அவர் பெளலிங் வீசுவதாக இருந்தால்தான் சரியானதாக இருக்கும்.
இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டுகளிலுமாக விளையாடும் நிலையில் தற்போது பாண்டியா இருக்கிறார். அதேவேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடம்பெற பெளலிங்கிலும் தாம் நிலையான ஃபார்முக்கு வர வேண்டும் என்பதை பாண்டியாவே உணர்ந்திருக்கிறார் என்று கோலி கூறினார்.