ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம்!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம்!

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் 82 பந்துகளில் 94 ரன்கள் குவித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 4-ஆவது பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர் ஆஸம். ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியான்தத் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மற்ற பாகிஸ்தானியர்கள் ஆவர்.

இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 1,258 நாள்கள் முதலிடத்தில் இருந்த நிலையில், இப்போது அதை இழந்துள்ளார். அவர் 857 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top