விமானத்தில் சக பயணிக்கு சரமாரியாக குத்து விட்ட மைக் டைசன்!

விமானத்தில் சக பயணிக்கு சரமாரியாக குத்து விட்ட மைக் டைசன்!

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மைக் டைசன், சீட்டில் இருந்து எழுந்து, பின்புறமாக இருந்த அந்த நபரின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

முன்னாள் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன், விமானத்தில் சக பயணி ஒருவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் மைக் டைசனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து போர்ட் லாடர்டேல் நகருக்கு மைக் டைசன் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். மைக் டைசனை அடையாளம் கண்டுகொண்ட சக பயணிகள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அவரும் சளைக்காமல் விரும்பியவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதே விமானத்தில் 2 நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் டைசனுடன் போட்டோ எடுத்துள்ளார்.
 
இன்னொருவருக்கு மைக் டைசனை பார்த்த மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு குதிக்கத் தொடங்கினார். தலைகால் புரியாமல் விமானத்திற்குள் அங்கும் இங்கும் அலைந்த அவரை சக பயணிகள் வித்தியாசமாக பார்த்துள்ளனர். தொடர்ந்து, மைக் டைசனின் பின்புறமாக இருந்து கொண்டு, டைசன் எரிச்சல் அடையும் வகையில் பேசியுள்ளார். தொடர்ந்து டைசனிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்திருக்கிறார். இந்த காட்சிகள் இன்னொரு நண்பரின் செல்போனில் ரிக்கார்டு ஆகிக் கொண்டிருந்தது.
 
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மைக் டைசன், சீட்டில் இருந்து எழுந்து, பின்புறமாக இருந்த அந்த நபரின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். வலி பொறுக்க முடியாமல் அந்த நபர் அலறல் சத்தம் எழுப்பியதால் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் டைசன் அடித்த அடியில், அந்த நபரின் முகத்தில் இரத்தம் வழிந்தது.
 
இதுகுறித்து சக பயணிகள் கூறுகையில், ‘டைசனுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரை அமைதியாக இருக்கும்படி டைசன் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த நபர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டைசன், எரிச்சல் அடைய வைத்தவர் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்’ என்று தெரிவித்தனர்.
 
மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டைசன் இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், தொந்தரவு செய்த நபருக்கு சரியான பதிலை டைசன் தந்துள்ளார் என்று இன்னொரு தரப்பினரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top