ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: ரூ.43,000 கோடியைத் தாண்டிய டிவி, டிஜிட்டல் ஏல மதிப்பு!

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: ரூ.43,000 கோடியைத் தாண்டிய டிவி, டிஜிட்டல் ஏல மதிப்பு!

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அண்மையில், 15 வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. முதல் முறையாக பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
 
தற்போது மொத்தம் 10 அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன.
 
ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 
முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. அதை தொடர்ந்து கடந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஸ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.
 
முதல் முறையாக 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top