ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசையில் பூணம் ராத் முன்னேற்றம்!

ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசையில் பூணம் ராத் முன்னேற்றம்!

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் பூணம் ராத், 606 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 18வது இடம் பிடித்தார். துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 629 புள்ளிகளுடன்  15வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (7வது இடம், 719 புள்ளி), கேப்டன் மிதாலி ராஜ் (9வது இடம், 693 புள்ளி) ‘டாப்–10’ பட்டியலில் நீடிக்கின்றனர்.

தென் ஆப்ரிக்க துவக்க வீராங்கனை லீசெல் லீ, 773 புள்ளிகளுடன், 7 இடங்கள் முன்னேறி ‘நம்பர்–1’ இடத்தை கைப்பற்றினார். ‘பவுலிங்’ தரவரிசையில் இந்திய ‘சுழல்’ வீராங்கனை ராஜேஷ்வரி கெய்க்வாட், 546 புள்ளிகளுடன் 18 வது இடத்துக்கு முன்னேறினார். ‘டாப்–10’ வரிசையில் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி (5வது இடம், 687 புள்ளி), பூணம் யாதவ் (8வது இடம், 654 புள்ளி), ஷிகா பாண்டே (10வது இடம், 623 புள்ளி) உள்ளனர். முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனாசன் (804 புள்ளி) தக்கவைத்துக் கொண்டார்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top