164 கி.மீ வேகத்துல பந்துவீசினேன் - முகமது ஷமி கடும் அதிருப்தி!

164 கி.மீ வேகத்துல பந்துவீசினேன் - முகமது ஷமி கடும் அதிருப்தி!

164 கி.மீ வேகத்தில் பந்துவீசினேன் என பௌலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை வேகமாக பந்துவீசிய, பௌலராக பாகிஸ்தானின் ஜாம்பவான் பௌலர் ஷோயிப் அக்தர் இருக்கிறார்.
 
161.3 கி.மீ வேகத்தில், அவர் வீசிய பந்துதான் அதிவேக பந்தாக இருக்கிறது. இதற்காக கின்னஸ் ரெக்கார்ட்டும் அக்தருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை அந்த சாதனைக்கு இவர்தான் சொந்தக்காரராக இருக்கிறார்.
 
இந்நிலையில், அதே பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், நான் வீசிய பந்துதான் அதிவேகமாக சென்றது எனக் கூறி புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
 
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், ‘‘நான் இரண்டு முறை 160+ வேகத்தில் பந்துவீசியிருக்கிறேன். ஒரு பந்து 164 வேகத்திலும், மற்றொரு பந்து 162 வேகத்திலும் சென்றது. ஆனால், அந்த போட்டியில் ஸ்பீடோ மிட்டார் ஒழுங்காக வேலைசெய்யவில்லை எனக் கூறி எனது, இந்த சாதனையை ஐசிசி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து நான் ஐசிசியிடம் புகார் கூறியிருக்கிறேன். ஐசிசி கூட இதுகுறித்து விளக்கமாக அறிக்கையும் வெளியிட்டது’’ எனக் கூறினார்.
 
ஷமி மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 85 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். 87 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்களையும், 13 டி20 போட்டிகளில் 21 விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.
 
2016ஆ் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிராக 2 ஓவர்கள்வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்து ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதன்பிறகு ஒரு சர்வதேச போட்டிகளில் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top